பஸ்ஸில் பயணித்த பயணி மர்ம மரணம்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுயநினைவற்ற நிலையில் இருந்த நபரை, பஸ் சாரதி, பதுளை வைத்தியசாலையில் இன்று(24) அதிகாலை அனுமதித்துள்ளார்.

ஹாலி-எல போகஹமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் பணிபுரியும் குறித்த நபர் வீடு திரும்பியபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரியில் தேனீர் இடைவேளைக்காக தனியார் பஸ் நிறுத்தப்பட்ட போது, குறித்த நபர் நலமாக இருந்துள்ளதாகவும் தெமோதரை பகுதியில் பஸ் பயணித்தபோது, அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததாக பஸ் சாரதி தெரிவித்துள்ளார்.