பஸ்களில் படங்கள், பாடல்கள் இனி இல்லை

                பஸ்களில் படங்கள், பாடல்கள் இனி இல்லை

பஸ்களில் படங்கள்

திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை அனுமதி பெறாமல் பஸ்களில் ஒளிபரப்புவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வந்தன.

கடந்த ஆண்டு விஷால் மற்றும் அவருடைய ரசிகர்களின் முயற்சியால் இரண்டு தனியார் பஸ்களில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பியது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது புதிய திரைப்படங்களை ஒளிபரப்பியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பஸ்களில் திரைப்படங்கள், பாடல்களை ஒளிபரப்ப உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறிவுசார் சொத்து உரிமை அமலாக்கப் பிரிவு (IPREC) உத்தரவிட்டது.

ஆனால் பேருந்துகளில் ஒளிபரப்பும் திரைப்படங்களுக்கு உரிய உரிமை பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று தெரிவித்த பஸ் உரிமையாளர்கள் வரும் 31ஆம் திகதி முதல் அனைத்து பஸ்களிலும் திரைப்படங்கள், பாடல்கள் ஒளிபரப்பப்படாது என்று உறுதி அளித்துள்ளனர்.

திருட்டு டிவிடிக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக போராடி வரும் நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]