பவுன்சர் பந்து கழுத்துப் பகுதியில் தாக்கப்பட்டநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுத் கருணாரட்ன

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ன பவுன்சர் பந்து கழுத்துப் பகுதியில் தாக்கப்பட்டநிலையில் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர்.

நிதானமாக ஆடிய திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை பட் கமின்ஸின் பவுனசர் பந்து ஹெல்மெட்டின் பின்புறத்தில் கழுத்திற்கு அருகில் தாக்கியது.

உடனடியாக நிலத்தில் விழுந்து வலியால் துடித்த திமுத் கருணாரட்னவிற்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் ஸ்டிரெச்சர் மூலம் மைதானத்திலிருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]