பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17 வயதுக்கு கீழ்ப்பட்ட மகளிர் கபடி அணியினர் தேசிய மட்டத்தில் முதலிடம்

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17 வயதுக்கு கீழ்ப்பட்ட மகளிர் கபடி அணியினர் தேசிய மட்டத்தில் முதலிடம்.

பழுகாமம்

மட்டக்களப்பு பட்டிருப்பு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17 வயதுக்கு கீழ்ப்பட்ட மகளிர் கபடி அணியினர் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

பாடசாலை மட்டத்திலான கபடி விளையாட்டுப் போட்டி மொறட்டுவ மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டி மட்டக்களப்பு கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கும் பண்டத்தரிப்பு ஜெசிந்தா மகா வித்தியாலயத்திற்கும் இடையில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் 30 க்கு 23 என்ற புள்ளிகள் அடிப்படையில் பழுகாமம்கண்டுமணி மகாவித்தியாலயம் வெற்றிபெற்றது.

வெற்றி பெற்ற மகளிர் அணிக்குபழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் வரவேற்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்தப் பாடசாலை கடந்த வருடம் பாடசாலை மட்ட தேசிய கபடி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளைப் படிப்பதற்கு கிளிக் செய்யவும்