பழி தீர்க்கப்படுவதற்காகவே டயானா கொலை செய்யப்பட்டார்: அதிர்ச்சி தகவல் வெளியானது!

பழி தீர்க்கப்படுவதற்காகவே டயானா கொலை செய்யப்பட்டார்: அதிர்ச்சி தகவல் வெளியானது!

பிரித்தானிய இளவரசி டயானா பழி தீர்க்கப்படுவதற்காகவே கொலை செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்படவுள்ள புத்தகம் ஒன்றிலேயே இந்த அதிர்ச்சி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sarah Whalen என்ற எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில், பாரீஸிலுள்ள Pont de l’Alma சாலையிலுள்ள சுரங்கப்பாதையில் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒரு கார் விபத்தில் இளவரசி டயானா மோசமாக காயமடைந்ததாகவும், அவர் இரத்தம் முழுவதும் வெளியேறி மெதுவாக சாக விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு நடப்பவற்றைக் குறித்து மறைக்காமல் வெளியில் சொல்ல டயானா திட்டமிட்ட நிலையில், எப்போதும் அவர் ஊடகங்களை சந்தித்து வந்துள்ளதாக Whalen தெரிவித்துள்ளார்.

அத்தோடு டயானா இறக்கும் வரை பல முறை கார் விபத்துகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கும் Whalen , அது டயானா குறி வைக்கப்பட்டதற்கு ஆதாரம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன் அரசராக இருந்த எட்டாம் ஹென்றியின் மனைவிகளான Anne Boleyn மற்றும் Catherine Howard ஆகியோர் கொல்லப்பட்டது போலவே டயானாவும் கொல்லப்பட்டதாக Whalen தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

எப்போதுமே பிரித்தானிய பெண்கள் முதுகில் குத்தப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள் என கூறும் Whalen, இங்கிலாந்தில் மிக நீண்ட காலமாகவே மனிதர்களை பலி கொடுக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது என கூறியுள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள குறித்த தகவலானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பழி தீர்க்கப்படுவதற்காகவே

பழி தீர்க்கப்படுவதற்காகவே

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]