பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பதே நல்லது!

பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பதே நல்லது!

நாம் இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை உண்பதாக எண்ணிக் கொள்கின்றோம். ஆனால் நாம் ஆசைப்பட்டு உண்ணும் உணவுகளில் அதிகளவானவை கார்போஹைட்ரேட்.

சமீப காலமாக எங்கும் சொல்லப்படும் வார்த்தை கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என்பதுதான். இன்னும் சிலர் கார்போஹைட்ரேட் உணவுகளையே தவிர்த்து விடுகின்றனர். புரதம், கொழுப்பு இவைகள் போல் கார்போஹைட்ரேட் சத்தும் உடலுக்குத் தேவைதான்.

முழு தானிய உணவுகளாக எடுத்துக் கொள்வதை மருத்துவ உலகம் அறிவுறுத்துகின்றது. மைதா போன்ற உணவுகள், அதிகம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி உணவு நார்சத்து இல்லாத உணவு இவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும் விகிதாச்சார உணவு காய்கறிகள், பழம் என கலந்து உண்ணுமாறும் அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வகையில் பயன் அளிக்கும் சில கார்போஹைட்ரேட் உணவு வகைகளைப் பார்ப்போம்.

சர்க்கரை வள்ளி கிழங்கு: ஒரு நிதான அளவுள்ள சர்க்கரை வள்ளி கிழங்கினை தோலோடு வேக வைக்கும்போது அதில் கார்போஹைட்ரேட் சுமாராக 24 கிராம் இருக்கும். சர்க்கரை வள்ளி கிழங்கு பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது.

பீட்ரூட்: ஒரு கப் பீட்ரூட்டில் 13 கி கார்போஹைட்ரேட் உள்ளது. பீட்ரூட்டில் பொட்டாசியம், கால்ஷியம், போலேட், வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. பீட்ரூட் நிறைந்த நன்மைகளை உடலுக்கு அளிக்க வல்லது.

சோளம்: சோளம் வருடம் முழுவதும் கிடைக்கும் உணவு. பலருக்கும் பிடித்த உணவு 100 கி சோளத்தில் 25 கி கார்போஹைட்ரேட், 3.36 கி புரதம் உள்ளது. வைட்டமின் சி சத்து நிறைந்தது. ரத்தக் கொதிப்பு உடையவர்களுக்கு சிறந்தது.

• பிரவுன் அரிசி, வெள்ளை அரிசியினை விட மிகவும் சிறந்தது.

• ஓட்ஸ் இருதய பாதுகாப்பிற்கு சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது.

• வாழைப்பழம் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்தது.

• ஆப்பிள், நோய் பாதிப்பு உடையோருக்கும், நோய் தவிர்ப்பிற்கும் சிறந்த சத்துணவு.

• உலர் பழங்கள் அளவோடு அன்றாடம் எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியினை நன்கு அளிக்கின்றது.

• பொதுவில் பழங்கள் அனைத்துமே நன்மை பயப்பவைதான். அவரவர் உடல் பாதிப்பிற்கேற்ப மருத்துவ அறிவுரைப்படி குறிப்பிட்ட பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

பாலிஷ் செய்த அரிசி, அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் ஜூஸ், வெள்ளை ரொட்டி ஆகியவைகளையே தவிர்க்க வேண்டும். மற்றபடி தொடர்ந்து கார்போஹைட்ரேட் இல்லாத உணவு என்பது தேவையற்றது. இது முதலில் ஒருவருக்கு மன சோர்வினை ஏற்படுத்துவதோடு சில உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

பல பிரச்சினைகளை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]