முகப்பு Cinema பல படங்களின் வாய்ப்பை தவிர்க்கும் அமலா பால்

பல படங்களின் வாய்ப்பை தவிர்க்கும் அமலா பால்

‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்ன குமாரின் மற்றுமொரு திரைப்படத்தில் அமலா பால் நடித்து வரும் நிலையில், தற்போது பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்து வருகின்றார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் அமலாபால், இயக்குனர் ரத்ன குமாரின் அடுத்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.

உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதால் மற்ற படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

மேலும் ‘ஆடை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிற நிலையில், விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com