பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர் வரும் 25ஆந் திகதி வியாழக்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்க செயலாளர் தங்கவேல் சிறிதரன் தெரிவித்தார்

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக இன்று (23) கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரிடம் கிழக்குப் பல்கலைக் கழக கல்விசார ஊழியர் சங்க செயலாளர் தங்கவேல் சிறிதரன் கையொப்பமிட்டு கையளிக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவை அதிகரித்தல் உட்பட சில காரணங்களுக்காக எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் ஒன்றிணைந்த கல்விசார ஊழியர் சங்க ஆணைக்குழுவின் அழைப்பிற்கு இணைங்க அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வேலை நிறுத்தப்ப போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

வேலை நிறுத்தத்தின் போது நீர், மின்சாரம், கால்நடைகளுக்கு உணவளித்தல், விவசாயத்துக்கு நீர்பாசனம் மற்றும் அவசியமான சேவைகள்; என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும். என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், நிருவாக சங்கம், மாணவர் ஒன்றியம் மற்றும் பதிவாளருக்கும் தகவலுக்காக அனுப்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]