பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதம்!!

மாதாந்த நிலுவக் கொடுபனவு உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா உழியர்கள் இன்று திங்கட்கிழமை (02) முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்;

கிழக்குப் பல்கைலக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் காலை வேளை ஒன்று கூடிய கல்விசாரா உழியர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடன் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாதாந்த இழப்பீட்டுப்படி 2016 – 2020 வரையான 5 ஆண்டு காலப்பகுதியில் 100மூ ஆக அதிகரிக்கப்படுதல் என்ற உடன்படிக்கையின் படி 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 20மூ ஆல் இது அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் இது சம்பந்தமான சுற்றுநிரூபம் இதுவரை வெளியிடப்படவில்லை.

அந்த உடன்பாட்டின் ஐ(iஎ) இல் குறிப்பிடப்பட்டமையை மீறி பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களின் ஓரு சாராருக்கு மட்டும் 15மூ புதிய மாதாந்தக் கொடுப்பணவு (சுற்றுநிரூபம் ப.மா.ஆ இல. 13-2017, 15.07.2017) வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பணவானது இதுவரை போதனைசாரா ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

உடன்பாட்டின் ஐ (ii) க்கு அமைவாக சம்பள மீளாய்வு 01.01.2017 இலிருந்து வழங்கப்படுவதற்கு பதிலாக 01.01.2016 முதல் மீள சீர்திருத்தப்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இதுவரை வழங்கப்படவில்லை.

2013 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித்திறன் கொடுப்பணவை உடன்பாட்டின் பிரகாரம் மீண்டும் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கடன் போதனைசாரா ஊழியர்களுக்கு பாதியளவே வழங்கப்படுகிறது. உடன்பாட்டின் பிரகாரம் சகலருக்கும் சமமமாக 2 மில்லியன் கடன் தொகையை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சகல பல்கலைக்கழகங்களிலும் திறன்மிக்க காப்புறுதித் திட்டத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டங்கள் எதனையும் அமுல்படுத்தப்படாமையும், பொருத்தமான ஓய்வூதியத்திட்டத்தை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கையும் உடன்பாட்டின் பிரகாரம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் கடந்த 34 நாட்களாக பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் உயர்கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]