பல்கலைக்கழ மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

பல்கலைக்கழ மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இன்று பிற்பகல் கொள்ளுபிட்டிய சந்தியில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தையே பொலிஸார் இவ்வாறு கலைத்துள்ளனர்.

மாணவர்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அலரிமளிகைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போதே பொலிஸாருக்கு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

எனினும், மாணவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுகின்றது.

இதன்காரணமாக, காலி வீதியை கொள்ளுபிட்டிய சந்தியிலிருந்து மூடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.