பல்கலைக்கழக புதிய கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயோக விஞ்ஞான பீட கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாணவர்களிடம் கையளித்தார்.

மேலும், புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளும் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதியை மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

நினைவுப் பலகையை திறந்து வைத்து புதிய பிரயோக விஞ்ஞான பீடக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத்திற்கான மொத்த செலவு 410 மில்லியன் ரூபாவாகும்.

அத்துடன் இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்திற்கு 784 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, தயாசிறி ஜயசேகர, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் மருத்துவ கலாநிதி கருணாரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Website – ww w.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]