பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் பணி

பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பீடத்திற்கும், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கான மாணவர்களை பதிவு செய்யும் பணி தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை

14 பல்கலைக்கழகங்கள், மூன்று பீடங்கள், ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் 109 பாடநெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 29,696 மாணவர்கள் சாதாரண அனுமதிக்காக தெரிவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் குறித்த பாடநெறிகளுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல் அடுத்த மாதம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]