பலாலி அபிவிருத்தி பணிகளை வெளிநாட்டிற்கு வழங்கப்போவதில்லை: நிமல் சிறிபால டி சில்வா

பலாலி அபிவிருத்தி பணிகளை வெளிநாட்டிற்கு வழங்கப்போவதில்லை: நிமல் சிறிபால டி சில்வா

யாழ் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘திகன விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அக்குழு அபிவிருத்தி முயற்சிகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும்.

அத்துடன் இரத்மலானை, மட்டக்களப்பு, பலாலி, சிகிரியா, கோகலை மற்றும் திகன விமான நிலையங்கள் ஆகியவை நாட்டின் விமான சேவையில் ஈடுபடுவதற்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளப்படும்.’என்று அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]