பலாலி அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை: நிமல் சிறிபால டி சில்வா

பலாலி அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை: நிமல் சிறிபால டி சில்வா

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையம் தொடர்பில், விமல் வீரவன்சவால் எழுப்பட்ட கேள்விக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வோம்.

பலாலி மட்டுமன்றி கண்டி திகன உட்பட ஏனைய பகுதிகளிலும் விஸ்தரிப்பு நடவடிக்கை இடம்பெறும்.

பலாலி விமானநிலையத்தின் அபிவிருத்திப்பணியை இந்தியாவிடம் கையளிக்க நாம் விரும்பவில்லை. அதேவேளை உள்நாட்டு விமானசேவையை பலப்படுத்த வேண்டியுள்ளது.’ என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]