பலாத்காரம் செய்து தோழியை சாத்தானுக்கு பலியிட்ட இளைஞன்! பெண்ணின் உடலில் அமானுஷ்ய சின்னங்கள் வரைந்தது ஏன்?

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பின்னர்  உடலில் அமானுஷ்ய சின்னங்கள் வரைந்த இளைஞருக்கு ரஷ்ய நீதிமன்றம் 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Krasnoyarsk நகரை சேர்ந்தவர் Artem Dylkov(22). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது தோழியான Ilona Yakovleva(21) வீட்டிற்கு சென்று அவரை தாக்கி பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர்  கழுத்தை நெரித்து கொலை செய்து அந்த இளம் பெண்ணின் நிர்வாண உடலில் அமானுஷ்ய சின்னங்களை வரைந்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த இலோனாவின் தாயார் மகளின் நிலை கண்டு உடனடியாக பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், இலோனாவில் உடலில் வரையப்பட்ட சின்னங்கள் அனைத்தும் சாத்தான் பூசைக்கு பயன்படுத்துபவை என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் அந்த இளம் பெண்ணை சாத்தானுக்கு பலியிட்டிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.

சுமார் ஓராண்டு கால விசாரணைக்கு பின்னர், கைதான Artem Dylkov ற்கு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]