பலாத்காரம் செய்து உயிருடன் பெண்ணுக்கு தீ வைத்தவிட்டு தப்பிக்க முயன்ற வாலிபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

வாலிபர் ஒருவர்  பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த இளம்பெண்ணுக்கு தீ வைத்துவிட்டு தப்பிக்க முயன்ற போது எரியும் தீயோடு பெண் வாலிபரை கட்டிபிடித்து கொலை செய்த சம்பவம் இந்தியாவில் நடைப்பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் – மால்டா மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, வாலிபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், குறித்த பெண்ணை உயிரோடு தீ வைத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண், எரியும் தீயோடு வாலிபரை கட்டிபிடித்தார். வாலிபரின் உடலிலும் தீ பிடிக்க இருவரும் உயிருக்குப் போராடினர்.

இதற்கிடையில், அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்க. சம்பவ இடத்துக்கு வந்த பொலஸார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் மீட்டனர்.

ஆனால், இந்த சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் உயிரிழந்தார். உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]