பலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி

17 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து உயிருடன் எரித்த சம்பவம் ஆந்திராவில் பதிவாகியுள்ளது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராஜூ(17) என்ற சிறுவனை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பத்மாவதியின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பத்மாவதி அங்குள்ள காட்டு பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் பத்மாவதி பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்படுவதற்கு முன்  பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பத்மாவதியின் காதலன் ராஜூ உட்பட மூன்று சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூவரும் தான் இந்த செயலையை செய்திருக்க வேண்டும்  என சந்தேகிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]