பலவீனமடைந்து வரும் இலங்கையின் பொருளாதாரம்

இலங்கை அரசியலில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலருக்கான ரூபாயின் மதிப்பு இரண்டு நாட்களில், 1.06 ரூபாயால் சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு 156.14 ரூபாயாக இருந்தது. இது நேற்றுமுன்தினம், 14ஆம் திகதி, 156.74 ரூபாயாக சரிந்தது.

நேற்று ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து, 157.20 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது, உள்நாட்டில் இறக்குமதிப் பொருட்களின் விலையை அதிகரித்து பணவீக்கம் ஏற்படவும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைவதற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் உறுதிப்பாடு தொடர்ந்தும் மோசமான நிலையில் இருப்பதால் பொருளாதார நிலை குறித்து பொருளியல் நிபுணர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]