பலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கொலை வழக்கின் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்கண்ணன். இவர் மகள் சாரதா (46). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போன சாரதா வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அங்குள்ள வனப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அது சாரதாவின் உடல் என  பொலிசாரால் அடையாலம் காணப்பட்டது.

ரமேஷ்(24) என்பவருடன் சாரதாவை பலமுறை பார்த்துள்ளதாக ஊர் மக்கள் கூற அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நான் பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து விற்கும் வியாபாரம் செய்கிறேன்.

நான் தொழில் நிமித்தமாக சாரதா வசிக்கும் பகுதிக்கு சென்ற போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்து அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளேன்.

கடந்த 5-ஆம் திகதி காட்டு பகுதியில் சுற்றிதிரிந்த சாரதாவை சந்தித்து அவர் அணிந்திருந்த நகைகளை கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் எனக்கு கோபம் ஏற்பட்டது.

இதையடுத்து சாரதாவின் கழுத்தை சால்வையால் நெரித்து கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த நகையை எடுத்து கொண்டு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]