பலமிக்க தமிழ் கட்சி தோற்றத்தில் ஐ.தே.கவுக்கு விருப்பமில்லை

“பலமிக்க தமிழ் கட்சி ஒன்று உருவாவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதில்லை” என, அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

‘அதையும் மீறி ஒரு தமிழ் கட்சி பலமிக்கதாக உருவாகினால் அது தமக்கு சார்பாக இருக்கவேண்டும் என அக்கட்சி விரும்பும் என்ற உண்மையை கூறுவதற்கு நான் அச்சப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஐனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர, அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார்.

மேலும், சர்வதேசத்தின் கவனத்தினை அது கொண்டிருக்கிறது எனவும் கூறினார். பின்னர் நான் அமைச்சர் மங்களவுடன் பேசும்போது கூறினேன் சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல. சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என.

பலமான ஒரு தமிழ் கட்சி உருவாகுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்புவதில்லை. அப்படியே ஒரு பலமான தமிழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]