பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை மற்றும் லக்ஷ்பான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மத்திய மலை நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை மற்றும் லக்ஷ்பான நீர்த்தேக்கங்களின் தலா மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அப்பகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதால் தோட்ட தொழிலாளர்கள் யாரும் தொழிலுக்கு செல்லவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்யும் மழையால் தொழிலாளர்களின் தொழில் வாழ்க்கை பாதிக்கும் என அச்சத்தில் உள்ளனர்.

இன்று நுவரெலியா, நானுஓய, அட்டன், டிக்கோய, போன்ற பிரதேசங்களில் அதிக மழை காரணத்தினால் தோட்ட அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளனர்.

அத்துடன் விவசாய காணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]