பலத்காரம் செய்ய முற்பட்ட நபர் கைது

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம மோனிங்டன் மேற்பிரிவு தோட்டத்திலிருந்து பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவரை பாலியல் பலத்காரம் செய்ய முற்பட்ட நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் டயகம பொலிஸார் கைது செய்துள்ளாக தெரிய வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த மாணவி வீட்டிலிருந்து வழமைபோல் டயகம பிரதேசத்தில் உள்ள உயர்தர பாடசாலைக்கு ஏனைய மாணவர்களுடன் சென்று கொண்டியிருந்தபோது, குறித்த சந்தேகநபர் மாணவியை பாலியல் பலத்காரம் செய்யமுற்பட்டதையடுத்து ஏனைய மாணவர்கள் சத்தமிட்டதன் காரணமாக சந்தேகநபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் மாணவி ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் திருமணம் முடித்த ஒருவர் என தெரியவந்துள்ளது.

பாதிக்கபட்ட மாணவி காயங்களுடன் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலக பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .