பற்றியெரியும் பாரிஸ் நோத்ர-தாம் தேவாலயம் – புகைப்படங்கள் உள்ளே

பாரிஸ்ன் மிகவும் பழமை வாயந்த வரலாற்றுத் தேவாலயமாகிய Notre-Dame-de-Paris இல் சற்று முன்னர் 19h00 மணியளவில் பாரிய தீ பற்றியுள்ளது.
உடனடியாககத் தீயணைப்பப் படையினர் களத்தில் இறங்கியும் தீ கட்டுக்குள் அடங்கவில்லை.

தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், தேவாலயத்தின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி, இந்த வரலாங்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் எரிந்து கொண்டிருப்பதைப் பார்ப்பது வேதனையளிக்கின்றது எனத் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Notre-Dame தேவாலயத்தின் கூரை தீடீரென 18:50 மணியளவில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் கூரை இடிந்து விழுந்துள்ளது.

856 வருட வரலாறு கொண்ட பாரிஸ் நோத்ர தாம் தேவாலயத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]