பருவமடைதல் தொடர்பான விசித்திர சடங்குகள்…

பருவமடைதல் சடங்குகள் நாம் பரவலாக பெண்கள் மத்தியில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், இந்த பழங்குடி மக்கள் ஆண்களுக்கு செய்யும் பருவமடைதல் சடங்குகள் வினோதங்களின் உச்சமாக திகழ்கின்றன. உலகின் பல்வேறு பழங்குடியினர் மத்தியில் குறிப்பாக ஆண்களுக்கென கடைப்பிடிக்கப்படும் சில விசித்திரமான பருவமடைதல் சடங்குகள் பற்றி தான் இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் சிலவன விசித்திரங்களாகவும், சிலவன மிக மோசமானவையாகவும் இருக்கின்றன…

காயங்கள்!

நியூ கினியாவில் இருக்கும் பப்புவா பழங்குடி மக்கள் ஓர் ஆண் பருவமடைந்தால் அவரது உடலில் குத்தி, அறுத்து, சிராய்ப்பு ஏற்படுத்தி காயங்களை ஏற்படுத்துகின்றனர். இதனால் அவர்களது தோல் முதலையின் தோலை போல மாறுகிறது. ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்ப்பட்ட இரண்டு சென்டிமீட்டர் நீளமுள்ள காயங்களை பிளேடு கொண்டு உருவாக்குகிறார்கள்.

விருத்தசேதனம்!

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பழங்குடி மக்கள் தங்கள் பழங்குடியை சேர்ந்த ஆண்மகன் பருவமடைந்தால் விருத்தசேதனம் எனப்படும் ஆண்குறி முன் தோல் அறுப்பதை சடங்காக கடைப்பிடித்து வருகிறார்கள். மிகவும் வலிநிறைந்த இந்த சடங்கு மூலம் சிலர் சில தருணங்களில் இறந்தும் உள்ளனர்.

முகத்தில் வெட்டு காயங்கள்…

கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த பாராபைக் கலாச்சாரத்தில் பருவமடையும் ஆண்மகன் முகத்தில் வெட்டு காயங்கள் ஏற்படுத்தப்படுகிறது. இது வலிநிறைந்த சடங்காக இருக்கிறது. அவர்கள் தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டு அதில் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் ஆண்மையின் அடையாளமாக அவர்கள் கருதுகிறார்கள்.

குருதி!

இரத்தம் பிரித்தெடுத்தல். நியூ கினியாவின் பப்புவா பழங்குடி இனத்தில் மற்றுமொரு சடங்கும் பின்பற்றப்படுகிறது. அவர்களது இனத்தில் ஒரு ஆண்மகன் பருவமடைந்தால், பிறப்பின் போது தன் உடலில் கலந்த தாயின் இரத்தத்தை பிரித்தெடுக்க வேண்டும் என்ற சடங்கு பின்பற்றப்படுகிறது. நாக்கில் ஊசி குத்தி இரத்தத்தை எடுக்கிறார்கள்.

எறும்புகள்!

இது தான் இருப்பதிலேயே மிகவும் கொடுமையானது. அமேசானில் இருக்கும் சாடேரே மேவே எனும் பழங்குடி மக்கள் ஒரு ஆண்மகன் பருவமடைந்தால் அவரது ஆண்மையை நிரூபிக்கும் வகையில் கைகளில் எறும்புகள் நிரப்பப்பட்ட கைவுரை ஒன்றை மாட்டிக் கொள்ள வேண்டும். அந்த எறும்புகள் ஊசி போல குத்திக் கொண்டே இருக்கும் பண்பு கொண்டவை ஆகும்.

பெண்களை அடித்தல்!

பிரேசிலை சேர்ந்த உவாப்ஸ் என்ற இனத்தை சேர்ந்த பெண்கள் பருவமடைந்து மாதவிடாய் துவங்கும் போது அவர்களை காட்டுமிராண்டி போல அடித்து சடங்கு ஒன்றை நிகழ்த்துகின்றனர். அவர்கள் இறக்காமல் இருந்தால் தான் திருமணம் செய்துக் கொள்ள தகுதியானவர்கள் என கருதுகின்றனர்.

பருவமடைதல்

விந்தை குடித்தல்!

நியூ கினியா எடோரோ பப்புவா பழங்குடியில் ஓரினச்சேர்க்கை சடங்கு ஒன்று இருக்கிறது. அதில், பெரியவர்களது விந்தை புதியதாக பருவமடைந்த ஆண்மகன் பருக வேண்டும். இதன் மூலம் அவர்கள் உண்மையான ஆண் என்பதை நிரூபணம் செய்கிறார்கள்.

பருவமடைதல்

பெண்குறி சிதைத்தல்!

மிகவும் கொடூரமானதாக காணப்படுவது இது தான். சோமாலியா, எகிப்து, மிடில் ஈஸ்ட் நாடுகளில் இது இன்றளவும் நடந்து வருகிறது. இவர்கள் பெண்களின் பெண்குறி மூல பகுதியை சிதைத்து, தைத்து, ஓர் பெண்ணின் கற்பை கணவன் மட்டுமே உடைக்க வேண்டும் என கருதி பெண்குறி சிதைக்கும் சடங்கில் ஈடுபடுகிறார்கள்.

(நன்றி : போல்ட் ஸ்கை)

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]