பருப்புக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்படாத பருப்பு ஒரு கிலோகிராமிற்கான வரி 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரிக்கப்பட்ட பருப்பு ஒரு கிலோ கிராமிற்கான வரி 9 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் பருப்பின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக, பருப்புக்கான வரியை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.