பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி ஒருவர் கொலை

பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி ஒருவர் கொலை.

பருத்தித்துறை பகுதியில்

யாழ்.பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன் ( வயது 48) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பேக்கரி உரிமையாளரான இவர் இன்று சனிக்கிழமை அதிகாலை (24.11) கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரவு 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ளார். அதன் போது ஏற்பட்ட தகராறின் பின்னர், அவர் அங்கிருந்து சென்ற சமயம், அவரது எதிரியான உழவு இயந்திர சாரதி, உழவு இயந்திரத்தினால் மோதி கொலை செய்துள்ளார்.

சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னர், 43 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி பருத்தித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த சிதம்பரபிள்ளை சிவபாலன் 3 பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]