பருத்தித்துறை நகர சபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் முன்னிலை ஆசனங்களை பெற்ற மற்றொரு சபையான பருத்தித்துறை நகர சபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது

பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட யாழ் பருத்தித்துறை நகர சபை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆறு உறுப்பினர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி இரண்டு உறுப்பினர்களையும் உதயசூரியன் மற்றும் வரதர் அணியினர் தலா ஒரு ஆசனங்களையும் பெற்றிருந்தனர்

தலைவரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு இன்று காலை வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்நிரஞ்சன்; தலைமையில் நடைபெற்றதுடன் அகில இலங்கை தமிழக் காங்கிரஸினால் இரகசிய வாக்கெடுப்பு கோரப்பட்டது

அதற்கு ஆதரவு இல்லாத காரணத்தால் பகிரங்கமாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட யோசப் இருதய ராஜா ஏழு வாக்குகளை பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரால் பிரேரிக்கப்பட்டவர் ஐந்து வாக்குகளை பெற்றதுடன் இந்த வாக்கெடுப்பில் உதய சூரயனும் வரதர் அணியினரும் நடுநிலமை வகித்தனர்

இதனால் ஈ.பி.டீ.பி உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பருத்தித்துறை நகர சபையில் ஆட்சி அமைத்துள்ளதுடன் பிரதிதவிசாளராகவும் அதே கட்சியின் நளினி என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]