முகப்பு News Local News பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்

பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் இதுவரை கிடைக்கப்பெறாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெற உள்ளன.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுவதுடன், இதில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.

அத்துடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாககவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் தமது தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற இணைப்பினை அழுத்துவதுடன், ஊடாக தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அத்துடன், 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314 0718 323 658 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தொலைநகல் மூலம் பரீட்சை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com