பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

நாட்டில் தற்போது அரசியல் குழப்பநிலை காணப்படும் நிலையில், நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் நாளைய தினம் கூடுகின்ற கூட்டத்தில் அரசாங்கம் பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் 107 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 96 ஆசனங்களையும் நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் அறுதிப் பெரும்பான்மைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]