பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது ஐ.தே.கவின் செயற்குழு :அதிரடி முடிவுகள் எடுக்கும் சாத்தியம்

பரபரப்பான அரசியல் சூழல்நிலையின் மத்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது.

ஐ.தே.கவினர் இடையே நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான எதிர்ப்புகள் வழுப்பெற்றுள்ள நிலையில், 50இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் இதன்போது ஒப்படைக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்பந்தம் குறித்த அமைச்சரவையின் ரகசியத்தை வெளிட்டமை, முன்னாள் அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்மோசடிகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள 100இற்கும் அதிகமான முறைப்பாடு அறிக்கைகளின் விசாரணைகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும் வலியுறுத்தியுமே விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

பொது எதிரணி, சுகந்திரக் கட்சி மற்றும் மாகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பலதரப்பும் விஜேதாஜ ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் சூழல்லில் ஐ.தே.கவின் இன்றை மத்திய செயற்குழு கூட்டும் அரசியல் அரங்கில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, தேசிய அரசின் பிரதான பங்காள கட்சியான சு.கவுடன் ஐ.தே.கவுக்கு ஏற்பட்டுள்ள சில அதிருப்திகரமான செயற்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விசேடமாக கலந்துரையாடப்படவுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் தனித்து ஐ.தே.க. ஆட்சியமைக்க வேண்டும் என்று ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிகளால் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அதிரடியாக சில தீர்மானங்கள் இன்று ஐ.தே.கவால் எடுக்கக்கூடும் என்றே அக்கட்சியின் வட்டாரங்களில் மேலும் அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]