பரபரப்பாக இடம்பெறும் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு

பரபரப்பாக இடம்பெறும் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு

irumbu thirai

நடிகர் விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள்.

விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை.

irumbu thirai

இதனால் விஷாலுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதை தொடர்ந்து சண்டகோழி-2வின் முதல் கட்ட படபிடிப்பு நிறைவடைந்துள்ளது.

irumbu thirai

தற்போது இரும்புத்திரை படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்து கன மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் மவுண்ட் ரோட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இரும்பு திரையை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதால் இப் படத்தின் படபிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடர்ந்து இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெற்றுவருகிறது .

irumbu thirai

விஷால் நடிப்பில் , இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இரும்பு திரை படத்தில் சமந்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

ஜார்ஜ் c வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

irumbu thirai

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விஷால் இப்படத்தை தயாரிக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]