பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய வணிக அமைச்சு

அடுத்த வருடம் முதல் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் இயங்கவுள்ளதுடன் இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு அறிவித்துள்ளது.

காங்கேசன்துறையில் 300 ஏக்கரில் இரசாயனத் தொழிற்சாலைக்கான தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வருடம் முல்லைத்தீவிலுள்ள ஓட்டுத்தொழிற்சாலை மற்றும் மட்டக்களப்பு வாழைச்சேனையிலுள்ள கடதாசித் தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வணிக அமைச்சு அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]