முகப்பு Cinema பரத்திற்கு உதவிய கௌதம் மேனன்

பரத்திற்கு உதவிய கௌதம் மேனன்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள திரைப்படம் ‘காளிதாஸ்’.

இந்தப்படத்தை லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், எம்.எஸ்.சிவநேசன் தயாரித்துள்ளனர்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், மழை என்ற பாடலை இயக்குனர் கௌதம் மேனன் நாளை (27-8-2018) வெளியிட இருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com