பரணி இடத்தில் செண்ட்ராயன், நமிதா இடத்தில் மும்தாஜ் – மீண்டும் கலைகட்டும் பிக்பாஸ்-2 முழுவிபரம் உள்ளே

பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கடந்த ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் அடுத்த 100 நாட்களுக்கு வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும்.

இடை இடையே பிக்பாஸ் நடத்தும் போட்டிகளும் இருக்கும். சக போட்டியாளர்களை வென்று கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பவரே வெற்றியாளர். இந்த நிகழ்ச்சி சீசன் 1 முடிந்து நேற்று சீசன் 2 நடைபெற்றது.

இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் போட்டியிடும் போட்டியாளர்கள் குறித்து கமல் அறிமுகம் நேற்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளார். விஜய் டிவி ப்ரோமோவில் சீசன் 1-இல் கலந்து கொண்ட ஓவியா இந்த சீசனிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்று தெரிந்து விட்டது. இறுதி கட்டமாக இவர்கள் தான் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர் என தெரிகிறது.

இதில் பரணி இடத்தில் செண்ட்ராயன், நமிதா இடத்தில் மும்தாஜ், கஞ்சாகருப்பு இடத்தில் தாடி பாலாஜி, அணுன்யா இடத்தில் ஜனனி ஐயர், வையாபுரி இடத்தில் ஆனந்த் வைத்தியநாதன், ரைசா இடத்தில் மமதி சாரி, கணேஷ் இடத்தில் மஹத், சக்தி இடத்தில் பரத், சினேகன் இடத்தில் டேனியல் பாலாஜி, ஆர்த்தி இடத்தில் நித்யா தாடி பாலாஜி என பலர் முந்தைய பிக்பாஸ்-ல் ஒப்பிடும் விதமாக இதில் பங்கேற்றுள்ளனர். ஆனால் இதில் யார் ஓவியா, யார் ஜூலி என்பதில் தான் சுவாரஸ்யம் நிறைந்துள்ளது.

1. யாஷிகா ஆனந்த்

2. ஆனந்த் வைத்தியனாதன்

3. தாடி பாலாஜி

4. நித்யா தாடி பாலாஜி

5. ஜனனி ஐயர்

6. சுமார் மூஞ்சி குமாரு டேனியல்

7. பொன்னம்பலம்

8. ஐஸ்வர்யா தத்தா

9. மமதி சாரி

10. மஹத்

11. மும்தாஜ்

12. பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்

13. டேனியல் பாலாஜி

14. பரத்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]