பயங்கரவாதி சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியை சோதிக்க நீதிமன்றம் அனுமதி

தற்கொலைதாரி சஹ்ரான் ஹசிமின், மகளின் இரத்த மாதிரியை பெற்று மரபணு பரிசோதனை நடத்த, நீதிமன்றம், இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றன

தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் மீட்கப்பட்ட சஹ்ரான் ஹசிமுடையது என சந்தேகிக்கப்படும் தலைப்பகுதியின் மாதிரி மரபணு பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

அதேவேளை தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் தங்கையின் இரத்த மாதிரியை பெற்று மரபணு பரிசோதனை நடத்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளதுடன் சஹ்ரானின் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]