முகப்பு News India பம்பையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் கண்டுபிடிப்பு

பம்பையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் கண்டுபிடிப்பு

பம்பையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கருதப்பட்ட பாலம் மண்ணுக்கு அடியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

பம்பை ஆற்றை கடக்க 2 பாலங்கள் இருந்த நிலையில் வெள்ள பெருக்கால் இந்த 2 பாலங்களும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

பம்பை ஆறு பாய்ந்த பகுதி முழுவதும் மண்ணால் மூடப்பட்டிருந்த நிலையில், இரு பாலங்களும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மண் அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பாலத்தில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதோடு, பாலத்தை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சபரிமலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பம்பை ஆறு திசைமாறி பாய்ந்ததால் தேவசம்போர்டுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் சேதமடைந்தன.

பம்பையில் மட்டும் ரூ.100 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதற்கிடையே பம்பை ஆற்றை கடக்க 2 பாலங்கள் இருந்த நிலையில், பக்தர்கள் இந்த பாலங்கள் பயன்படுத்தி வந்ததோடு, ஆம்புலன்ஸ், உள்ளிட்ட வாகனங்களும் இந்த வழியை பயன்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com