பன்மைத்துவத்தைப் பேணுகின்ற அரசமைப்பு இல்லாமையால் நாடு மிகவும் சீரழிகிறது

பன்மைத்துவத்தைப் பேணுகின்ற அரசமைப்பு இல்லாமையால் நாடு மிகவும் சீரழிகிறது என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பன்மைத்துவத்தைப்
கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்

இதன் போது அவர் மேலும் தெரிவத்ததாவது,

எமது நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.காலா காலத்திற்கு வறுமையினைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நாடாகவே இலங்கை இருக்கின்றது. நாட்டினுடைய மக்களை தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்று பிரித்துள்ளார்கள். அவரவருக்கு உரிய உரிமைகளை அவர்களுக்கு கொடுக்காமல் எப்போதும் ஒருவரை ஒருவர் தூற்றிக் கதைக்கும் தண்மைதான் எமது நாட்டில் தற்போதும் இருக்கின்றது. ஆரோக்கியமான செய்திகள் நம்முடைய நாட்டில் இல்லை. அதற்கான காரணம் என்னவெனில் ஒரு ஒழுங்கான உறுதிப்பாடான அரசமைப்பு இல்லை.

முப்பது வருட காலம் யுத்தம் இடம்பெற்ற வியட்நாம் நாடு பொது உடமைக் கொள்கை எனும் கொள்கையால் அந்த நாடு மிக மகோன்னதமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் பொருளாதாரத்திலே முன்னேறி இருக்கின்றது. எமது இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை அண்மிக்கப் போகின்றது.

ஆனால் இன்னும் எமது நாடு சொல்லிக் கொள்ளக் கூடிய வகையில் எந்த வித முன்னேற்றமும் அடையாததாக இருக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் இங்கு ஒரு நிலையான அரசியற் கொள்கை இல்லை. இந்த நாட்டின் பன்மைத்துவத்தினைப் பேணி இருக்கின்ற மக்கள் அனைவரும் அவர்களை அவர்களே கௌரவிக்கக் கூடிய விதத்திலான அரசியலமைப்பு இல்லாததன் காரணமாக இந்த நாடு மிகவும் சீரழிந்து இருக்கின்றது-என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]