பன்குடாவெளி கிராமத்தின் அபிவிருத்திக்காக 40 இலட்சம் ரூபா நிதி

பன்குடாவெளி கிராமத்தின் அபிவிருத்திக்காக 40 இலட்சம் ரூபா நிதி

பொருளாதார, கொள்கை திட்டமிடல் அமைச்சு மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேசத்துக்குள்பட்ட பன்குடாவெளி கிராமத்தின் அபிவிருத்திக்காக 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக பொருளாதார, கொள்கை திட்டமிடல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தையடுத்து குறித்த கிராம அபிவிருத்தி வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக சனிக்கிழமை (18) நாடாளுமன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் து.மதன் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆராய்நதனர்.

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களின் சார்பாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னதுரை சர்வானந்தன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பன்குடாவெளி துறையடி வீதி மற்றும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழக மைதானத்தின் அபிவிருத்திக்கென இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

பன்குடாவெளி கிராம மக்களும் மீனவர்களும் பெரிதும் சிரமத்தின் மத்தியில் பயணம் செய்து வந்த இந்த துறையடி வீதியை விரிவாக்கம் செய்து கொங்ரிட் இடுவதற்காக 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை செப்பனிடுவதன் மூலமாக நரிப்புல்தோட்டம், மகிழவெட்டுவான், கற்குடா ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும், மீனவர்களும் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

அத்துடன் இக்கிராமத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் எவரெஸ்ட் விளையாட்டுக் கழக மைதானம் 20 இலட்சம் ரூபா நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

பன்குடாவெளி கிராமத்தின் பன்குடாவெளி கிராமத்தின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]