பனை மரத்தில் மோதி வேன் விபத்து -இருவர் காயம்

பனை மரத்தில் மோதி வேன் விபத்து -இருவர் காயம் சத்துருக்கொண்டானில் சம்பவம்

மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலையில் சத்துருக்கொண்டானில் புதன்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற வான் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சத்துருக்கொண்டான் பகுதியில் கட்டுப்பாட்டினை இழந்து பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்சம்பவத்தில் வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பூ.கோகுலராஜ் மற்றும் எஸ்.கண்ணா ஆகியோர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]