பனாமா கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது – கடற்படை

கொழும்பு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. டானியலா என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ, இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் அதிவேகத் தாக்குதல் படகுகளின் தீயணைப்பு பிரிவினரின் அதிரடிச் செயற்பாட்டின் மூலம் மேற்படி கப்பிலின் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படையினர் இந்திய உயரிஸ்தானிகர் காரியாலயத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த எஸ்சிஜி சூர் என்ற இந்திய கடலோர ரோந்துக் கப்பலும் இந்த தீயணைப்பு நடவடிக்கைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன், இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய, சர்வதேச கப்பல்களின் உதவிகளும் இந்த தீயணைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]