பந்துவீச்சாளருக்கு முதுகை காட்டிய அவுஸ்திரேலிய வீரர் – கை தட்டி சிரித்த கேப்டன்! வீடியோ உள்ளே!

அவுஸ்திரேலியாவிற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதன் போது அவுஸ்திரேலியா ப்ரைம் மினிஸ்டர் லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியுள்ளது.

துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் ஜார்ஜ் பெய்லி பந்துவீச்சாளருக்கு முதுகை காட்டியபடி, ஸ்லிப் பீல்டர் இருக்கும் திசையைப் பார்த்து நின்றார். தனது தலையை மட்டும் பந்துவீச்சாளரைப் பார்த்தபடி திருப்பியிருந்தார்.

வித்தியாசமான இவரின் துடுப்பாட்டத்தை பார்த்து தென் ஆப்பிரிக்க தலைவர் பாப் டூபிளிசிஸ், பீல்டிங்கை மறந்து சிரிக்க தொடங்கினார்.

https://platform.twitter.com/widgets.js

இந்த காட்சியை கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும் ஏன் ஜார்ஜ் பெய்லி அவ்வாறு விளையாடினார் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் கிரிக்கட் வீரர்கள் இந்த முறையை கடந்த 1924ஆம் ஆண்டு பின்பற்றியுள்ளனர். இது தொடர்பான விளக்கங்கள் உள்ள பகுதியை புத்தகத்தில் இருந்து படம் பிடித்து Hugh de Morville என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]