பந்துல குணவர்த்தனக்கு எச்சரிக்கை

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில், இன்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

அண்மையில் பந்துல குணவர்த்தன, மத்திய வங்கி விடயம் குறித்து சாட்சியமளிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் விண்ணப்பித்துள்ளதாக, ஊடகங்களிடம் வௌியிட்ட கருத்து தொடர்பில், இதன்போது விசாரிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் எழுத்து மூலம் விண்ணப்பிக்க எதிர்பார்ப்பதாகவே தான் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும், ஊடகங்களை மேற்கோள்காட்டி, எழுத்து மூலம் விண்ணப்பித்துள்ளதாகவே பந்துல கூறியுள்ளமை உறுதியாவதாக ஆணைக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.

அவ்வாறு இருப்பின் தான் வேண்டுமென்றே கூறவில்லை, தவறாக வார்த்தைகள் வந்திருக்கும் என பந்துல அதற்கு பதிலளித்துள்ளார்.