பத்மாவத் – பெருகும் வரவேற்பு 500 கோடி வசூல்

பத்மாவத் 500 கோடி

சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை பின்னணியாக கொண்டு டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி “பத்மாவத்” எனும் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு ராஜபுத்திரர் இனத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

பல்வேறு போராட்டங்களுக்கு பின் கடந்த மாதம் 25-ந்தேதி ‘பத்மாவத்’ படம் நாடு முழுவதும் திரைக்கு வந்தது. குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இதற்கிடையே ‘பத்மாவத்’ படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் ‘பத்மாவத்’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த 3 மாநிலங்களிலும் நீதிபதிகள் கொண்ட குழு முன்பு ‘பத்மாவத்’ படம் திரையிடப்படுகிறது. அதன் பிறகு இந்த படத்தை 4 மாநிலங்களிலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘பத்மாவத்’ படம் திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக மும்பை தியேட்டர்களில் ‘பத்மாவத்’ படம் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆக ஓடுகிறது.

கடந்த 11 நாட்களில் ‘பத்மாவத்’ திரைப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை எட்டி உள்ளது. வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் மேலும் பல கோடி ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சர்ச்சைகள் காரணமாக பரபரப்பை ஏற்படுத்தியதால் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]