பத்மாவதி திரைப்படத்தை தடை கோரிய வழக்கை , உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் புனைவுத் திரைப்படம், ‘பத்மாவதி.’ ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் உருவாகியுள்ள `பத்மாவதி’ திரைப்படத்துக்கு ஒரு தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், `பத்மாவதி’ திரைப்படத்திலிருந்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை, அதைத் திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டேன்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்

மேலும் பத்மாவதி திரைப்படத்தை தடை கோரிய வழக்கை , உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]