பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் 64 வயதில் காலமாகியுள்ளார்

ஞாநி சங்கரன்

பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் 64 வயதில் காலமாகியுள்ளார்.

தமில் நாட்டின் பிரபலமான பத்திரிக்கையாளர்களில் ஒருவரான ஞாநி சங்கரன். செங்கல்பட்டை பிறப்பிடமாக கொண்ட அவர், எழுத்தாளர், நாட‍க‍க் கலைஞர், அரசியல் விமர்சகர் என பன்முகங்களைக் கொண்டவராவார். அவர் அரசியல் குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக சென்னையில் கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]