பத்திரிகை செய்தி தொடர்பில் விசாரணை

அரசாங்கத்தின் பிரதான நாளிதழ் உள்ளிட்ட இரண்டு பத்திரிகைகளில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற துக்க தின அனுட்டிப்பு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, முப்படைகளின் தளபதிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் விசேட ஆலோசனை வழங்கப்பட்டதாக குறித்த பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், இது யாரேனுமொரு நபர் அல்லது அமைப்பினால் உருவாக்கப்பட்டு ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து துரித விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]