பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை முன்னேறியுள்ளதை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை தொடர்வது, தடுக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் தமது டுவிட்டர் பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை கடந்த ஆண்டைவிட 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 131ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]