பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் தனியார் ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து- வீடியோ உள்ளே

பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தீப்பரவலின் காரணமாக அங்குள்ள பகுதிகளில் வெடிப்பு சம்பவமும் பதிவாகியுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பத்தரமுல்லை பெலவத்தை பத்தரமுல்லை பெலவத்தை

கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]