பத்தனையில் லொறி குடைசாய்ந்து விபத்து

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை – குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் டிப்பர் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது.

இந்த விபத்தில், மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சேதன பசளை ஏற்றிச்சொன்ற லொறி, குயின்ஸ்பெரி பகுதியில் வைத்து பின்நோக்கி செலுத்தும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]