பத்தனையில் இரண்டு லொறிகள் மோதி பாரிய விபத்து

ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதியில் பத்தனை பகுதியில் இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெரிகியார் தோட்டப் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

ஹட்டனிலிருந்து நுவரெலியாவிற்கு சாணம் ஏற்றிச்சென்ற லொறி மற்றும் தலவாக்கலையிலிருந்து கொட்டகலை வந்த லொறி எ்னபன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தினால் காயமடைந்த லொறியின் சாரதி, கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.